சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் டாக்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தெரு, கடைகள் நிறைந்த பகுதி. இதனால் மக்கள் குடும்பங்களுடன் கடைகளுக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையினால், பெண்களும் குழந்தைகளும் அந்த பகுதியை சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் மதுபான கடையை அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.