மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பிரதான சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். தொடர் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குண்டும், குழியுமான சாலையில் சீரமைத்து தர சீர்காழி நகராட்சி நடவடிக்கை எடுக்குமா ?
வாகன ஓட்டிகள், சீர்காழி.