குண்டும், குழியுமான சாலை

Update: 2026-07-12 13:50 GMT

கரூர் மாவட்டம், ஒரம்புப்பாளையத்தில் இருந்து கவுண்டன்புதூர் செல்வதற்குப் பாதியளவு மட்டுமே தார் சாலை போடப்பட்ட நிலையில், ரெயில்வே பாதை அருகே செல்லும் பகுதி பல ஆண்டுகளாக மண் சாலையாகவே கிடக்கிறது. பராமரிப்பின்றி குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் இந்த மண் சாலையால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த மண் சாலையைச் சீரமைத்துத் தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்