கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதையொட்டி அமைத்துள்ள சர்வீஸ் சாலை சமீபத்தில் பெய்த மழையால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. நெடுஞ்சாலையை ஓட்டிய பகுதி என்பதால் சாலை சேதமடைந்து உள்ளதால் விபத்து அபாயம் அதிகமாக உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.