பர்கூர் ஊராட்சி ஒன்றிம் ஒப்பதவாடி ஊராட்சி 8-வது வார்டு கரடிகுட்டை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளின் தங்கும் விடுதியும் உள்ளது. இருப்பினும் இப்பகுதிக்கு செல்லும் தார்சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்களும், கல்லூரி மாணவிகளும் சிரமம் அடைகின்றனர். மேலும் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு புதிய தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.