சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-07-12 13:47 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்குச் செல்லும் சாலை முற்றிலும் பெயர்ந்து, குண்டும், குழியுமாக நடந்து கூட செல்ல முடியாத நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட விரைந்து செல்ல முடியாமல் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்