பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சியில் வடசந்தையூர், குப்பனூர் சாலவலசு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் எஸ்.பாளையம், சாலவலசு, செம்பியானூர், கோட்டமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பகுதிகளுக்கு செல்ல கோட்டமேடு-சாலைவலசு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சாலையில் மழைநீர் தேங்கி குண்டும், குழியுமாக உள்ளது. எனவே பள்ளமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.