அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் இருந்து கடம்பூர் வரை தற்போது சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி ஆமை வேகத்தில் மிகவும் மந்தமாக நடைபெறுவதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.