‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-07-12 15:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை வழியாகப் புதுக்கோட்டை - ஆலங்குடி சாலை செல்லும் கேப்பரை இணைப்புச் சாலை, நீண்ட நாட்களாகக் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது. இது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்போது சாலை அமைக்கும் பணியை நடைபெற்று வருகிறது. இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்