கரூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுக்காலியூர் வரை சாலையின் மையத்தடுப்புச் சுவரில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய பஸ் நிலையத்தில் இருந்து டி.செல்லாண்டிபாளையம் ஊரின் பாதி தூரம் வரை மட்டுமே தெருவிளக்குகள் எரிகின்றன. அதிலிருந்து சுக்காலியூர் வரை விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் பஸ் வசதியும் இல்லாததால், கரூரிலிருந்து வேலை முடிந்து இரவு நேரங்களில் நடந்து வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் அச்சத்துடன் இவ்வழியாக செல்கின்றனர். எனவே, இப்பகுதியில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் ஒளிரச்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.