சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-07-12 14:07 GMT

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பழைய கோரையாற்றுப் பாலம் இடிக்கப்பட்டுப் புதிய பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், விராலிமலை, மணிகண்டம் மற்றும் பஞ்சப்பூர் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள் அனைத்தும் ராமச்சந்திரா நகர் - செட்டியப்பட்டி சாலை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளன. இதனால் இந்த தற்காலிக மாற்றுப் பாதையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதோடு, இரவு நேரங்களில் இப்பள்ளங்களில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்