சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2026-07-12 13:48 GMT

அரியலூரில் இருந்து வி.கைகாட்டி வரை தற்போது சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்