அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனியங்குறிச்சி சின்னேரி முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவாயில் வரை சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. மேலும், மழைநீர் செல்லும் வழித்தடத்திலும் கருவேல மரங்கள் மண்டி கிடப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் வடிய வழியின்றி பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.