குண்டும், குழியுமான சாலை

Update: 2026-06-28 13:40 GMT

கவுண்டம்பாளையம் முருகன் நகர், சிவ நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்காததால் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும்  மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மழையின்போது சாலை சேறும், சகதியுமாக மாறி அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்