சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-06-28 09:53 GMT

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் செல்லும் வழியில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு செல்லும் தெருவில் சாலையில் குடிநீர் திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த சாலையை முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவேந்திரகுமார், திருவட்டார்.

மேலும் செய்திகள்