சேறும் சகதியுமான சாலை

Update: 2026-08-16 11:15 GMT

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள காவேரி தெரு பகுதி சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சகதி காடாக காட்சியளிக்கின்றது. இதனால் அங்கு குடியிருப்பவர்கள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்