விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் அன்றாடம் பயணிக்கும் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் சிலர் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?