கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவிர அள்ளி கிராமத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. அந்த பணிகள் முடிந்த பின்னரும் சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சேதமான சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?