சாலையில் குழிகள்

Update: 2026-06-21 15:58 GMT

துடியலூர் –வெள்ளக்கிணறு சாலையில் ெரயில்வே கேட் அருகே பல இடங்களில் குழிகள் காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவில் குழிகள் இருப்பது தெரியாததால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்