சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமமடைகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைத்துதர முன்வர வேண்டும்.