ஜல்லி கற்கள் குவியல்கள் அகற்றப்படுமா?

Update: 2026-06-14 17:39 GMT
சின்னசேலத்தில் காமராஜர் பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிவடைந்த பின்னரும் அங்கு கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் அகற்றப்படாமல் குவியல் குவியலாக ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அதில் இடறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் பாதசாரிகளும் கால்இடறி கீழே விழுகின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஜல்லி கற்கள் குவியல்களை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்