விபத்துகள் தவிர்க்கப்படுமா?

Update: 2026-06-14 17:28 GMT

மதுரை பெரியார் பஸ்நிலையம் நுழைவு வாயிலின் அருகே உள்ள திருப்பத்தில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தினமும் காலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகின்றது. மேலும் சில சமயங்களில் இந்த பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி தொடர் விபத்துகளும் ஏற்படுகின்றது. பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து நிறைந்த இந்த முக்கிய சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்