பாதியில் நின்ற சாலை பணி

Update: 2026-06-14 13:37 GMT

கோவை கீரணத்தம் கிருஷ்ணா நகர் பகுதியில் பழைய சாலை பெயர்க்கப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது பாதியில் நின்ற பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்