கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜநகர், சுயம்புலிங்க நகர் பகுதிகளில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தெருக்களில் அலங்கார தரைகற்கள் அகற்றி நீளமான பள்ளம் தோட்டப்பட்டது. குழாய்கள் பதிக்கப்பட்ட பின் இதுவரை பள்ளம் சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த தெருக்கள் வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பள்ளத்தால் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் தோட்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.
-ராமதாஸ்சந்திரசேகரன், சந்தையடி.