புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சாலை சந்திப்பு மற்றும் திருப்பங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் எதிர்புறம் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பெரிய உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பு இந்த பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.