செங்கல்பட்டு மாவட்டம், கீழ்க்கட்டளை பகுதியின் திருவள்ளுர் நகரின் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களையும்,வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.