மதுரை ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி அய்யனார்நகர் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பாலம் மற்றும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள பாலம் மற்றும் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.