கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம் பழைய பஸ் நிலையத்தை அடுத்த பெட்ரோல் பங்க் அருகில் தார்ச்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் இந்த குழியில் இறங்கி சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனா். மேலும், குழியை பார்த்து தங்களுடைய வாகனங்களை திடீரென்று நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்.
-ராஜா, வெள்ளகோவில்.