குண்டும், குழியுமான சாலை

Update: 2026-08-02 16:26 GMT

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டையில் இருந்து காருகுடி கிராமத்திற்கு செல்லும் தார்சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி ஜல்லிகற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்று வரவும், அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள் நடந்து மற்றும் சைக்கிள்களிலும் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திடும் இந்த சாலையை விரைந்து சீரமைத்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்