வேலூர் சேண்பாக்கம் சர்வீஸ் சாலை அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேல் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கிடக்கிறது. அந்தக் கால்வாயில் யாரேனும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் கம்பில் சாக்கு பையை கட்டி அடையாளத்துக்கு வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சங்கீதன், வேலூர்.