கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் கரூர் வரை கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சாலையில் வெகுதூரம் சென்று திரும்ப வர வேண்டி உள்ளதால் தடுப்பு கட்டைகளை இடித்து இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் தடுப்பு கட்டை குறுக்கே செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்தும், உயிரிழப்பும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.