ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.