குண்டும் குழியுமான சாலை

Update: 2026-05-31 16:08 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்துர் பகுதியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியே அன்றாடம் பயணிக்கும் தொழிலாளர்கள், பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இந்த சாலையால் அவ்வப்போது சிறுசிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்