தரைப்பால கம்பியால் விபத்து

Update: 2026-05-31 14:12 GMT

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே பழைய சூரமங்கலத்திற்கு செல்வதற்கான ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் நுழைவுவாயிலில் மழைநீர் செல்வதற்கான வாய்க்கால் அமைத்து அதற்கு மேல் கம்பிகள் போடப்பட்டுள்ளன. இந்தநிலையில் சாலையில் உள்ள கம்பிகள் வளைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகனங்களும் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள கம்பிகளை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்