அரியலூர் மாவட்டம் திருமானூரில் இருந்து விழுப்புணங்குறிச்சி வழியாக ஏலாக்குறிச்சிக்கு தார்சாலை செல்கிறது. தற்போது இந்த சாலையில் ஆண்டவர் கோவில் அருகே சிறிய அளவிலான தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், வடுகபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கவுள்ளதால், இந்த பாலப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.