அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முத்துவாஞ்சேரி கிராமத்தில் பஸ் நிலையத்தில் இருந்து கொள்ளிடக்கரை வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.