கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி மஜீத் தெரு பிள்ளையார் கோவில் முதல் சின்ன திருப்பதி கோவில் வரை சாலை சேதமடைந்து மேடு பள்ளமாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. முதியவர்கள், பள்ளி மாணவர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே ஊரின் மைய பகுதியில் சேதமான சாலையை புதுப்பிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.