பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2026-05-31 12:27 GMT

மதுரை பெத்தானியா புரம் 63-வது வார்டில் உள்ள அன்னை தெரசா வீதி நுழைவாயிலின் அருகே செல்லும் கிறிதுமால் நதியின் மேல் செல்லும் சிறிய பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பாலத்தில் பக்கவாட்டு தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்