பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) எழுபத்தெட்டு ஏரியா பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மழை பெய்தால் அந்த சாலை போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறி விடுகிறது. எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.