கன்னியாகுமரி ரெயில்வே பாலத்திற்கு 200 மீட்டர் முன்பாக உள்ள 4 வழிச்சாலையில் 4 ரோடுகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து கிழக்கு பக்கமாக சுனாமி குடியிருப்புக்கு செல்லும் இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், கன்னியாகுமரி.