புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டை ஒன்றியம் பெரிச்சுவண்ணியம்பட்டி வரை உள்ள 3 கிலோ மீட்டர் தார்சாலை போடப்பட்டு 3 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் பல்வேறு இடங்களில் தார்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.