சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-05-24 17:22 GMT

 அந்தியூர் அருகே பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள லட்சுமிநாராயண சாமி கோவில் முதல் மாரியம்மன் கோவில் வழியாக லிங்கையன் தோட்டம் வீதி வரை சுமாா் 500 குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள சுமார் 1 கி.மீ. தூரமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு் செல்கின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்