ராயக்கோட்டை ஊராட்சி எச்சம்பட்டி 4 வழி சாலை பிரிவு ரோட்டில் இருந்து ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் வரை தார்சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?