மேல்மலையனூர் அடுத்த சிறுதலைப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மேல்புரடை கிராமத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் வாகனங்களும் அடிக்கடி பழுதடைவதால் வேதனையடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய சாலை அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.