விருத்தாசலம்- சேலம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சாலையேரம் அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடக்கூட இடவசதி இல்லாத நிலை உள்ளது. மேலும் இந்த செடிகளால் அருகில் உள்ள வாய்க்கால் தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. வாகனஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?