விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-05-24 15:53 GMT

மதுரை நகர் பகுதியில் பல சாலைகளில் புதிய தார்ச்சாலை போடப்பட்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது வரை குறியீடுகள் இடவில்லை. மேலும் அறிவிப்பு பலகைகளும் வைக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதிகாரிகள் வேகத்தடை அமைக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்து அதில் குறியீடு இடவும், அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்