வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-05-24 13:01 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் இருந்து முத்துவாஞ்சேரி செல்லும் சாலையில் முனியங்குறிச்சிக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நாகமங்கலம் சாலையில் இருந்து வி.கைகாட்டி செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், பாதசாரிகள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்