மூடப்படாத குழியால் விபத்து

Update: 2026-05-24 09:48 GMT

திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில் இருந்து அல்லாளபுரம் வழியாக அத்திக்கடவு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் அங்குள்ள பி.ஏ.பி. வாய்க்கால் அருகே மரத்தின் வேர்களால் அடைப்பு ஏற்பட்டது. இதையொட்டி, குழாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் தினமும் விபத்துகள் நடக்கிறது. மேலும் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சண்முகம், அருள்புரம்.

மேலும் செய்திகள்