குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணைக்கிணர் முதல் கோமங்கலம் வரை செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த கிராம இணைப்பு சாலை வழியாக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வாகனங்களும் பள்ளிக்கு செல்லும் வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்வேந்தன், குடிமங்கலம்.