வெள்ளை வர்ணம் பூச வேண்டும்

Update: 2026-05-17 13:05 GMT

அரியலூர் நகரில் உள்ள வ.உ.சி. தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தங்களது வாகனங்களை அதில் விட்டு அவதிப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளின் மீது வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

மேலும் செய்திகள்